’மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது... ’- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.;

Update:2025-12-05 09:43 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் கோர்ட்டு உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரித்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று முன் தினம் மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த கோர்ட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது....... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில்,

#AIIMS,

புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்