தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வல்லநாடு பகுதியில் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;

Update:2025-07-11 18:52 IST

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, வல்லநாடு பகுதியில் வைத்து கடந்த 17.6.2025 அன்று ஒருவரிடம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் சின்னத்துரை (வயது 34) என்பவர் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் சின்னத்துரையை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் இன்று (11.7.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்