காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவில்கூட நினைக்காத வகையில் தண்டனை: ரஜினிகாந்த் வலியுறுத்தல்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என ரஜினிகாந்த் தெரிவித்தார்;

Update:2025-04-26 01:45 IST

சென்னை,

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இயற்கையாகவே அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதை செய்தவர்களையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இனி இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய அவர்கள் கனவில்கூட நினைக்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவாக அதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்