பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூவர் கைது
இளைஞர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் சேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார். அப்போது அவரது ஐடிக்கு ஒரு பெண் சேட் செய்ய தொடங்கினார். பின்னர் நாளடைவில்இவர்கள் நன்றாக பேசி பழகி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் இளைஞரை தனிமையாக சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் குதூகலமடைந்த இளைஞர், உடனடியாக.சரி என ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளைஞரை அந்த பெண் வரவழைத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்று காத்திருந்த இளைஞருக்கு பெரும் அதிச்சி காத்திருந்தது. அப்போது பெண்ணிற்கு பதிலாக அந்த இடத்திற்கு ஒரு கும்பல் வந்தனர். இதனைக்கண்ட இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்கள் இளைஞரிடம் இருந்த போன், பைக்கினை மிரட்டி வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் சிலர் பெண் போல பேசி தன்னை ஏமாற்றியதாக உணர்ந்த இளைஞர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆன்லைன் செயலி மூலம் இளைஞரிடம் பெண் போல் பழகிய பாளையங்கோட்டை திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த நல்ல முத்து, முத்துக்குமார், ஜெயராஜ் ஆகிய மூவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.