புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் முப்பெரும் விழா: ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.;

Update:2025-10-15 20:30 IST

சென்னை,

சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்த நாளையொட்டி, சோழவரம் மண்டல பள்ளி ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் அவரது பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, அவரது பெயரில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என 3 விழாக்கள் சேர்த்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவுக்கு, சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெ.ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.சின்னமணி நாடார், காமராஜர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளையும், மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். நிறைவாக, பள்ளி முதல்வர் எச்.ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்