திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - சிறப்பு பணிக்கு 300 பேர் நியமனம்
ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி சென்னை, பழநி, திருப்பரங்குன்றம், மதுரை, உள்ளிட்ட கோவில்களில் இருந்து 300 பேரை ஜூலை 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை பணியில் அமர்த்தி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேம் நடக்க உள்ளது. ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.