நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது
போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை அந்த நபர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.;
சமுதாயத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை, முகநூலில் பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக திருநெல்வேலியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி சமுதாயத்தில் உள்ள மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன்மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன்ராஜ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாககர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவைச் சேர்ந்த கனி மகன் ஷேக்முகமது (வயது 48), என்பவர் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.