திருநெல்வேலி: பேட்டையில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-22 02:15 IST

கோப்புப்படம்

திருநெல்வேலி,

திருநெல்வேலி பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 45). தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயில், காந்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்