அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திருப்பத்தூர் இளைஞர்: இந்து முறைப்படி திருமணம்

வெளிநாட்டுப் பெண் என்பதால் மணமக்கள் குறித்து கிராமத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.;

Update:2025-07-13 21:47 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் கீழையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரு.முருகானந்தம் - சாந்தி தம்பதியரின் மூத்த மகன் பிரபு முருகானந்தம். பொறியாளரான இவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். உலகை உலுக்கிய கொரானோ காலகட்டத்தில் இன் தி பிகினிங் என்ற சிறையிலிருந்து வெளிவரும் சேலஞ்ர்ஸ்களுக்கான குறும்படம் எடுத்துள்ளார். தொடர்ந்து திரை விழாக்களுக்கும் சென்றுள்ளார்.

அந்நிகழ்வில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த உட்லேண்ட் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த பிரெயன்ரேல்-கிறிஸ்டினா ராபின்ஸ்சன் தம்பதியரின் மகளான கரினாரேலை சந்தித்துள்ளார். சினிமா, கலை, இலக்கியம், தத்துவம் போன்ற விசயங்களில் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். கரினாரேல் நடனக் கலைஞராகவும் இருந்துள்ளார். சிறிது காலம் விரும்பி வந்த இவர்கள் வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தை கோரியுள்ளனர்.

இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததின் பேரில் கீழையப்பட்டியில் உள்ள மணமகனின் வீட்டில் இந்து முறைப்படி இன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. அமெரிக்கப் பெண் வீட்டிலிருந்து உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டோர் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். வெளிநாட்டுப் பெண் என்பதால் மணமக்கள் குறித்து கிராமத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்