தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல் - சீமான்

தை மகளே வருக! தமிழர் நலம் பெறுக என்று சீமான் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-15 11:54 IST

சென்னை,

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல். தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட தை மகளே வருக! தமிழர் நலம் பெறுக. உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்