திருப்பூர்: பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பிரதீப் என்ற பிரவீன் (வயது 25). இவர் தனக்கு யாரும் இல்லை என கூறி கணவரை இழந்த நிலையில், ஒரு மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானார்.
இதற்கிடையில் பிரவீனுக்கு தாய் இருப்பதை அறிந்த அந்த பெண், பிரவீனின் தாயார் வீட்டிற்கு சென்றார். ஆனால் பிரவீன் தாயார் அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதற்கிடையில் பிரவீனும் தன்னை ஏமாற்றிவிட்டதாக வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்தனர்.