இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஆஸ்திரேலியா ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
‘சத்தியம் வெல்லும் நாளை நமதே’ - தேமுதிக
‘சத்தியம் வெல்லும் நாளை நமதே #DMDKForTN #DMDKFor2026’ என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விநியோகம் செய்ததாக கூறி 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி 5 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பின் விடுவிக்கப்பட்டார்.
காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமுஎகச தோழர்களுக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா?; தேவையின்றி யார், யாரோ சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மத்திய மந்திரி அமித்ஷா கோவை வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி "வந்தாரா" எனும் வன விலங்குகள் மீட்பு பாதுகாப்பு மறுசீரமைப்பு மையத்தை துவங்கி வைத்ததுடன், வன விலங்குகளுடன் கொஞ்சி விளையாடினார்.
கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.