இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

Update:2025-03-04 09:12 IST
Live Updates - Page 2
2025-03-04 07:03 GMT

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டப்பட்ட முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். 4.08 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வரவேற்பு பகுதி, உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

2025-03-04 05:34 GMT

தாயார் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மு.க.அழகிரி  வந்துள்ளார். தயாளு அம்மாள் உடல் நிலை, சிகிச்சை குறித்து மு.க.அழகிரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

2025-03-04 05:18 GMT

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 4,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது. பாதுகாப்பு கருதி 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2025-03-04 05:01 GMT

சர்வதேச உறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது தலிபான் அரசு. சமீபத்தில் பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. 2021-ல் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் விதித்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது. 

2025-03-04 04:07 GMT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 64.080க்கு விற்பனையாகிறது.

2025-03-04 04:05 GMT

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரச்சினைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

2025-03-04 04:02 GMT

எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது.அது வெற்றி அடையாது என்று மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்பு குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில் கூறியுள்ளார்.

2025-03-04 04:00 GMT

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும். புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

2025-03-04 03:45 GMT

கொளுத்தும் வெயிலை சமாளிக்க, போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. பொருத்திய ஹெல்மெட், நாரால் செய்யப்பட்ட தொப்பியையும் காவலர்களுக்கு வழங்கினார் ஆவடி காவல் ஆணையர் சங்கர்.

2025-03-04 03:44 GMT

சென்னை, சைதாப்பேட்டையில் பள்ளி மாணவியிடம் குடிபோதையில் ஆபாச செயலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்