இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Jan 2026 11:11 AM IST
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம்...நியூசிலாந்து கேப்டன்
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்தார்.
- 24 Jan 2026 11:09 AM IST
8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 24 Jan 2026 10:58 AM IST
கூட்டணிக்கு வர தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் இத்தனையா..? - தி.மு.க., அ.தி.மு.க. அதிர்ச்சி
4-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் தே.மு.தி.க.,, இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
- 24 Jan 2026 10:58 AM IST
அடுத்தடுத்து விலகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்: மீண்டும் அதிமுகவில் இணையும் எம்.பி.?
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தர்மர் எம்.பி. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 24 Jan 2026 10:56 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2 வீராங்கனைகள் விலகல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர். இதன்படி தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகி உள்ளனர்.
- 24 Jan 2026 10:32 AM IST
‘கில்லி’ சாதனையை ஓவர்டேக் செய்த ‘மங்காத்தா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
- 24 Jan 2026 10:31 AM IST
சாதனை மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 24 Jan 2026 10:29 AM IST
ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- 24 Jan 2026 9:51 AM IST
கேரள சட்டமன்ற தேர்தலில் நடிகை பாவனா போட்டியா?
கேரள சட்டமன்றத் தேர்தலில் நடிகை பாவனா களம் இறங்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.
- 24 Jan 2026 9:49 AM IST
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பதிலுரை: அ.தி.மு.க. புறக்கணிப்பு
இன்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரை இடம் பெற்றது. ஆனால், முதல்-அமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.
















