திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி

திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.;

Update:2026-01-24 08:17 IST

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 571 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

23 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 84 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்