இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-05-01 09:19 IST


Live Updates
2025-05-01 14:19 GMT

தஞ்சை பெரியகோயிலில் இரண்டு பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்தது சமூகவலைத்தளத்தில் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

2025-05-01 14:18 GMT

இந்திய ராணுவத்தில் மீண்டும் இணைகிறது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர். பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், துருவ் ஹெலிகாப்டர்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

2025-05-01 14:15 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பெண்களை, தேவஸ்தான ஊழியர் எனக்கூறி ஏமாற்றி நகை பறித்து வந்த மதுரையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

2025-05-01 14:14 GMT

விழுப்புரம் மாவட்டம் இளந்துரை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை ஒட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.

2025-05-01 13:06 GMT

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் கூறியுள்ளது.

2025-05-01 12:03 GMT

‘ஜனநாயகன்' படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானல் சென்ற விஜய். விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் விஜயின் வேன் மீது ஏற முயன்றதால் முன்பகுதி சேதம் அடைந்தது.

2025-05-01 11:35 GMT

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

2025-05-01 10:35 GMT

மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டனது, தவெகவினர் உற்சாகக்குரல் எழுப்பினர். விஜய் மீது பூக்களை தூவிய தவெகவினர் டிவிகே..டிவிகே என்று கோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். விஜயை காண்பதற்காக மரங்கள் மீதும் வாகனங்கள் மீது தவெக தொண்டர்கள் காத்து நிற்கின்றனர்.தமது வாகனத்தை பின் தொடர வேண்டாமென ஏற்கெனவே தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கினார். 

2025-05-01 09:57 GMT

நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தொண்டனாக இருந்தால் மட்டுமே கட்சி பணியை சிறப்பாக செய்து அனைவரையும் சந்திக்க முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

2025-05-01 08:47 GMT

இதுவரை இல்லாத அளவாக நேற்று (மே.1) ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டியது பதிவுத்துறை.

Tags:    

மேலும் செய்திகள்