இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025

Update:2025-05-01 09:19 IST
Live Updates - Page 2
2025-05-01 07:21 GMT

நடிகர் அஜித் பிறந்த நாள்; எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்- எடப்பாடி பழனிசாமி

2025-05-01 06:28 GMT

கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும்" தமிழகத்தில் இம்மாதம் வெயிலின் தாக்கம், கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும் இந்த மாதத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும்  -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

2025-05-01 06:01 GMT

மதுரையில் சுங்கச்சாவடி முன் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை ஆட்சியர் சங்கீதா, விசிக கட்சியினருக்கு எதிராக  செயல்படுவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2025-05-01 05:37 GMT

  • இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் கிளம்பியுள்ள பிரச்சினை
  • களத்தில் இறங்கியுள்ள இருட்டுக்கடை நிறுவனர் கிருஷ்ணசிங்கின் சகோதரர் பேரன் பிரேம் ஆனந்த் சிங்
  • வரவு செலவு தவறு குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்
  • இருட்டுக்கடை தொடர்பாக கவிதா சிங் மற்றும் நயன் சிங்கிடம் யாரும்தொடர்பு கொள்ள வேண்டாம்-பிரேம் ஆனந்த் சிங்

2025-05-01 05:11 GMT

"நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும்"

"சர்வதேச உழைப்பாளர் தினமான இன்று இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர்களுக்கு

உரிய பங்கு கிடைக்க வேண்டும்

உழைப்பாளர்களுக்கு மரியாதை கிடைக்கும்

வரை இந்தியா வளர்ச்சி அடையாது"

- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

2025-05-01 04:58 GMT

மநீம தலைவர் கமல் மே தின வாழ்த்து

"உழைத்து உயர்வதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த மே தின வாழ்த்துகள்

வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது சொல் அல்ல

செயல் என்பதை உணர்ந்து உழைத்து வரும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்"

- கமல்ஹாசன்  

Tags:    

மேலும் செய்திகள்