இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

Update:2025-12-03 09:42 IST
Live Updates - Page 2
2025-12-03 11:01 GMT

சென்னை, திருவள்ளூரை சூழும் கனமழை மேகங்கள்

சென்னை, திருவள்ளூரை சூழும் கனமழை மேகங்கள். அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

2025-12-03 10:21 GMT

முளைக்கத் தொடங்கிய மக்காச்சோளம்.. விவசாயிகள் கவலை

பெரம்பலூர் அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோளங்கள் மழை காரணமாக விளைநிலங்களிலேயே முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான இடங்களில் மக்காச்சோளங்கள் விளைநிலங்களிலேயே முளைத்ததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025-12-03 10:19 GMT

புழல் ஏரியில் இருந்து 1,500 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக உபரிநீர் திறப்பு மொத்தம் 21.20 அடி உள்ள புழல் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தொட்டுள்ளது; நீர்வரத்து 2,930 கன அடியாக உள்ளது.

2025-12-03 10:16 GMT

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண அலைகடலென திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்.

2025-12-03 10:04 GMT

பாக்.ல் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளில் புதிதாக எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் 2010-ல் ஆண்டு 16 ஆயிரமாக இருந்தது 2024ல் 48 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மொத்தமாக 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்வதாகவும், அதில் 80 சதவீதம் பேர் தாங்கள் பாதிப்புக்குள்ளானதே அறியாமல் வாழ்க்கையை நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ள தகவலால் அதிர்ச்சி.

2025-12-03 08:53 GMT

மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

அனைத்து மொபைல் நிறுவனங்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் விரும்பினால், செயலியை தாங்களே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும்போது, ஏன் அதை மொபைல் போன்களில் கட்டாயமாக இணைக்க வேண்டும்?" என்று இரு நிறுவனங்களும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், தங்கள் எதிர்ப்பை அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2025-12-03 08:49 GMT

11 ஆண்டுகளாக விமானத்தை தேடும் மலேசியா

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, 239 பேருடன் மாயமான மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் மீண்டும் தொடங்குகிறது. “No Find, No Fee” என்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம், 55 நாட்கள் இடைவிடாத தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. விமான பாகங்களை |அந்நிறுவனம் கண்டறிந்தால், $70 மில்லியன் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

2025-12-03 08:46 GMT

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி

சென்னை அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி.

2025-12-03 08:23 GMT

‘இந்தியா' கூட்டணி வலிமையாக இருக்கிறது - செல்வப்பெருந்தகை 


திமுக தரப்பில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டதும் பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

2025-12-03 08:22 GMT

தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்".. 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா? 


'தேரே இஷக் மெய்ன்' படம் 5 நாட்களில் ரூ.72.71 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்