இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

Update:2025-12-03 09:42 IST
Live Updates - Page 3
2025-12-03 08:21 GMT

த.வெ.க. நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையனின் கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரல் 


கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார்.

2025-12-03 08:20 GMT

மழையில் சேதமடைந்த நெற்பயிர்கள்; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தேவை - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


இழப்பீடு வழங்காமல் உழவர்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2025-12-03 08:18 GMT

மு.க.ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் ஆலோசனை: 5 பேர் குழுவினர் பங்கேற்பு 


தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.

2025-12-03 07:52 GMT

மிக கனமழை எச்சரிக்கை.. மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா..? 


தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-03 07:51 GMT

மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ரோல் மாடல் ஆக எடுத்துச் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு 


மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல,உரிமை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2025-12-03 07:49 GMT

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு 


டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

2025-12-03 07:47 GMT

வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம் - மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு 


ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண்(வயது 5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளார். பழத்தை சாப்பிட்ட சிறுவன் அதனை விழுங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், வாழைப்பழம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியது.

2025-12-03 07:44 GMT

தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு அகல கைவிரிக்கும் காங்கிரஸ்: எத்தனை தொகுதிகள் தெரியுமா? 


நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்பட்டு வருகிறது.

2025-12-03 07:42 GMT

வெனிசுலாவுக்குள் புகுந்து கெட்டவர்கள் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் அறிவிப்பு 


அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கரீபியன் கடற்பகுதிகளில் போதைபொருள் கடத்தல்காரர்களின் படகுகளை, அமெரிக்க கடற்படை கடந்த செப்டம்பர் 2-ந்தேதி தாக்கி அழித்தது. இதன் தொடர்ச்சியாக கடத்தல்காரர்களின் பல படகுகளை அடுத்தடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது.

2025-12-03 07:41 GMT

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்... ஆழ்கடலில் தேடும் பணி 30-ந்தேதி மீண்டும் தொடக்கம்


வருகிற 30-ந்தேதி முதல் 55 நாட்களுக்கு, ஆழ்கடலுக்குள் சென்று மலேசிய விமானத்தின் பாகங்களை மீண்டும் தேடும் பணி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்