''அப்துல் கலாமாக நடிக்க தனுஷை விட பொருத்தமானவர் யாரும் இல்லை'' - இயக்குனர் ஓம் ராவத்
அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று இயக்குனர் ஓம் ராவத்
கூறி இருக்கிறார். ''கலாம்: தி மிசைல் மேன் ஆப் இந்தியா'' படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
ரூ.78,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.680, கிராமுக்கு ரூ.85 உயர்ந்துள்ளது.
அமீபிக் மூளை காய்ச்சல் - 2 பேர் உயிரிழப்பு
கேரளாவில் அமீபிக் மூளை காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 3 மாத குழந்தை, மலப்புரத்தை சேர்ந்த 52 வயது பெண் அமீபிக் மூளை காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவது, கிரேன் நிறுத்தத்திற்காக போடப்பட்ட மண் மேடை ஆகியவற்றை அகற்றும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றன.
மிசோரமில் முதல் ரெயில் நிலையம்
சுதந்திரத்திற்கு பின் மிசோரமில் முதல் ரெயில் நிலையம்
சுதந்திரத்திற்கு பிறகு மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் நிலையத்தை செப்.13ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக 2ம் அலகில், இன்று முதல் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 2 அலகுகளைக் கொண்ட இங்கு தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 8 ஆண்டுகளாக சரி செய்யப்படாததால் மின் உற்பத்தி அதில் நடக்கவே இல்லை. தற்போது 2ம் அலகிலும் பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 31,854 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 31,854 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.23 அடியாக உயர்ந்து நீர் இருப்பு 92.248 டி.எம்.சி. ஆக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு மற்றும் கால்வாய் வழியே 23,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நாளை தமிழகம் வருகிறார் ஜனாதிபதி
2 நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். நாளை மறுநாள் திருவாரூர் மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
திருச்சியில் அதிகாலையில் கோர விபத்து - 3 பேர் பலி
திருச்சி சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.