குறைந்தது சிலிண்டர் விலை - வெளியான புதிய விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும்: பெ.சண்முகம்
பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பெ.சண்முகம், பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னையின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 61.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நீர் இருப்பு 7.257 டி.எம்.சி. ஆக உள்ளது.
சசிகாந்த் செந்தில் எம்பி 4-வது நாளாக உண்ணாவிரதம்; கண்டுகொள்ளாத காங்கிரஸ்
தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி எம்பி சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் இருந்தபடியே இன்றும் 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ள சசிகாந்த் செந்திலுக்கு தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்வு. வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
ரஷிய அதிபர் புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று, நாங்கள் 3 பேரும் கருத்துகளை பரிமாறி கொண்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.