இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்கள், மேட்ச் ஒளிபரப்பாகும் சேனல்கள், மேட்ச் தொடர்பான ப்ரொமோஷன்கள் என எங்கும் எந்தவகையான போதைப்பொருளும் விளம்பரப்படுத்தக் கூடாது என்று பிசிசிஐ-க்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் யுடியூப் பிரபலங்களான திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கெனவே சிறையில் உள்ள 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்.பி. கண்ணன் பரிந்துரைத்திருந்த நிலையில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் பிரபல நகைக்கடையில் துப்பாக்கியுடன் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இருவர் கைதாகியுள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஜன.28ல் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். அபராதத்தை செலுத்தினால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அயுத்தயா கோவிலில் மாங்காய் எட்டவில்லை என புத்தர் சிலை மீது ஷூ காலோடு ஏறி மாங்காய் பறித்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் அர்ரா பகுதியில் உள்ள தனிஷ் நகைக்கடையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளையர்கள், நகைக்கடை ஊழியர்களை மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் சிசிடிவி காட்சி வெளியானது. கொளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஐசிசி தொடர்களில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் (13 வெற்றிகள்) என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா.
பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் வழங்கும் இழப்பீட்டை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரு.25,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு 'பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இளம் வீரர்கள் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து சென்று போட்டிகளை வெல்ல முடியும் என்று தெரிந்த பிறகே ஓய்வு பெறுவேன் என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.