மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு.
சுமார் 20 நிமிடங்கள் முடங்கிய 'எக்ஸ் வலைதளம்' மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
நான் ஒருநாள் இஸ்லாமியன் இல்லை''
``ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை..!'' - தவெக தலைவர் விஜய்யின் இஃப்தார் நோன்பு குறித்து சீமான் கருத்து
கேரளா: உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோவை பார்த்து டயட் பின்பற்றிய ஸ்ரீநந்தா (18) என்ற இளம்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களாக இவர் தண்ணீர் உணவுகளையே சாப்பிட்டது மட்டுமன்றி, பல நாட்கள் பசியுடன் இருந்ததால் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கியுள்ளது.
மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர். மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் திமுகவினருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை தோலுரித்துக்காட்டியுள்ளார் என்று மத்திய இணைமந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் ; முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம்ஸ்ரீ திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.