இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025

Update:2025-03-11 10:23 IST
Live Updates - Page 3
2025-03-11 07:16 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.   

2025-03-11 06:30 GMT

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகாகி வருகிறது. 14 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 442 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 160 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 955 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

2025-03-11 05:39 GMT

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி

மும்மொழிக்கொள்கை விவகாரம், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. எம்.பி.க்களின் அமளிக்கு மத்தியில் அவை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 

2025-03-11 05:17 GMT

நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்