இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

Update:2025-03-13 09:15 IST
Live Updates - Page 5
2025-03-13 03:46 GMT

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீது நாளை( மார்ச் 14ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

2025-03-13 03:46 GMT

ஈஷா மையம், ஜக்கி வாசுதேவ் குறித்த யூடியூபர் ஷ்யாம் மீரா சிங்கின் வீடியோக்களை நீக்க கூகுள், எக்ஸ், மெட்டா நிறுவனங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-03-13 03:46 GMT

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

2025-03-13 03:46 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்