இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
டாஸ்மாக் கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டு உள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர, பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பை எந்த நிலையிலும் எங்களால் ஏற்க முடியாது என கூறியுள்ள தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்கிறது என்றும் கூறினார்.
த.வெ.க.வில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் சபரிநாதன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எச்சரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
த.வெ.க.வில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் சபரிநாதன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் புகார் அளித்து உள்ளார். அதில், கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் என்னுடைய உயிருக்கும், சூரியனார் கோவில் ஆதீன சொத்திற்கும் ஆபத்து என்றும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மாயமான சிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை பனையூரில த.வெ.க. அலுவலகத்தின் முன் பெண் ஒருவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த இளம்பெண் மகனுடன் சென்றுள்ளார். எனினும், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அந்த பெண், சிறப்பு குழந்தைகள் முன்னேற்றத்திற்கு விஜய் உதவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
மதுரையில் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஒருவர் பலியானார்.
மதுரையில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.