தவெக மாவட்ட செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சேலம் கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.;
கரூர்,
கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக சேலம் கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வெங்கடேசனை 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.