இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

Update:2025-10-17 09:38 IST
Live Updates - Page 4
2025-10-17 04:23 GMT

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு - குளிக்க தடை


கனமழை காரணமாக குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2025-10-17 04:17 GMT

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது


தங்கமும், வெள்ளியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விலை உயர்ந்துகொண்டே போவது நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


2025-10-17 04:16 GMT

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.


2025-10-17 04:15 GMT

கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வருகை


கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கரூர் வந்துள்ளனர்.

2025-10-17 04:14 GMT

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


பிரதமர் செபாஸ்டியன் மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


2025-10-17 04:13 GMT

நெருங்கும் தீபாவளி பண்டிகை - விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு


சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்களில் ரூ.3,129 ஆக இருந்த பயண கட்டணம் இன்று ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது.


2025-10-17 04:12 GMT

வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது


கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.


2025-10-17 04:11 GMT

சென்னையில் தொடரும் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


2025-10-17 04:09 GMT

ராசிபலன் (17-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும்..!


மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா


Tags:    

மேலும் செய்திகள்