இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 404 ஆக உயர்வு
காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.
வளர்ப்பு நாய்களை பொதுஇடங்களில் அழைத்துவரும்போது, வாய் மூடி அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் சூழலில், அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா வெற்றி பெற்றுள்ளது என கூறினார். மகா கும்பமேளாவில் பங்கேற்று அதனை வெற்றியடைய செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்து விவாதம் நடத்த கோரி மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதில், தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தற்போது இருக்கும் நிலையை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
எனினும், இந்த ஒத்திவைப்பு நோட்டீஸ் தொடர்பாக அவைகளில் விவாதம் நடத்த அனுமதி அளிக்காத நிலையில், இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.