நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் நெல்லை டவுன் பகுதியில் ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
புதுச்சேரியில் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டு உள்ளார்.
டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமியை நோக்கி புறப்பட்டார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்து உள்ளது. இதனால், சற்று நேரத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது தொடங்கும்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,210-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (18-ந்தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,250-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்து விவாதம் நடத்த கோரி மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதில், தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தற்போது இருக்கும் நிலையை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் ஆட்டோ மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிகள் 10 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.