சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
இன்று காலை நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 300 கன அடி நீர் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
பஞ்சாப் வெள்ளத்தால் எனது மனம் உடைந்தது
பஞ்சாப் வெள்ளத்தால் பேரழிவிற்கு உள்ளானதை கண்டு எனது மனம் உடைந்தது. பஞ்சாப் எப்போதும் எந்த துன்பத்தையும் வலிமையாக எதிர்கொள்ளும், விரைவில் மீள்வோம் என்று சுப்மன் கில் கூறியுள்ளார்.
ஜெர்மனி வெளியுறவு மந்திரி இந்தியா வருகை
ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஜோஹன் டேவிட் 2 நாள் பயணமாக பெங்களூரு வருகை தர உள்ளார். இஸ்ரோ மையத்தை நேரில் பார்வையிடுகிறார். டெல்லியில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் ஜோஹன் டேவிட் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்த அமர்பிரசாத் என்ற தொழிலாளின் உடலைக் காட்ட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 2,000 தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணியை தொடங்கிய அமைச்சர் பி.டி.ஆர்.
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியில்தான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளேன் என்று மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.