ஜார்கண்ட் மாநிலம் போகரோ மாவட்டத்தில் லபனியா பகுதியில் உள்ள மலையில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையம் வந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை விமான நிலையம் சென்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி டிசம்பருக்கு பின் முடிவு செய்யப்படும் என தவெக தெரிவித்து உள்ளது. விஜய் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலத்துடன் நடைபெறும். இதனை முன்னிட்டு, மே 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் சங்கீதா அறிவித்து உள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு 2 கட்டங்களாக ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டதில், அகில இந்திய அளவில், ஒடிசாவை சேர்ந்த ஓம் பிரகாஷ் பெஹேரா என்ற மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கிரீன் லைனில் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரையிலான ரெயில் சேவைகள் சிறிது தாமதத்துடன் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏப்ரல் 22-ந்தேதி (நாளை) சென்னையில் நடைபெறுகிறது.
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவன பால் பொருட்களின் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பால் பொருட்களின் விலை குறைந்தபட்சம், ரூ.1 முதல் ரூ.70 வரை உயர்த்தப்பட்டுள்ளது என பாண்லே நிறுவனம் அறிவித்து உள்ளது.