தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை - 33, மதுரை - 52, கடலூர் - 49, கோவை - 42, தஞ்சை - 40 இடங்களிலும் திறப்பு. சந்தை விலையை விட இங்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெ.படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார். சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற ஜெ.பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார்.
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்று ஜெயலலிதா படத்திற்கு ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை: வெளியே கஞ்சா வாங்குவது ரிஸ்க் ஆகிவிட்டதால், தங்கும் அறையிலேயே கஞ்சா வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் நடத்தும் திடீர் சோதனையின் போது பிடிபட்டுள்ளனர்
கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேர் கைது
மகா கும்பமேளா: 60 கோடி பேர் புனித நீராடல்
கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.