இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Feb 2025 8:24 PM IST
பீகாரின் பாகல்பூர் நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, நாடு முழுவதும் மக்களுடைய காலை உணவின் ஒரு பகுதியாக மகானா (அல்லி விதைகள்) இடம் பெற்றுள்ளது.
இது ஒரு சிறந்த உணவாக உள்ளது. அதன் சுகாதார பலன்களை கவனத்தில் கொண்டு, ஆண்டுக்கு 300 நாட்கள் இதனை என்னுடைய உணவின் ஒரு பகுதியாக உட்கொள்கிறேன். இதனை உலக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.
- 24 Feb 2025 8:09 PM IST
பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தூதரகத்தில் திடீரென இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
- 24 Feb 2025 7:26 PM IST
டெல்லி முதல்-மந்திரி அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளன என அதிஷி குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில், பா.ஜ.க. புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
- 24 Feb 2025 6:58 PM IST
கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார். அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலை கிராம மக்களின் சிரமங்கள் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை. கோவை - கடமான்கோம்பை பகுதிவாழ் மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கையாக கேட்டு கொண்டார்.
- 24 Feb 2025 6:03 PM IST
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.
- 24 Feb 2025 5:52 PM IST
பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு 4 வலிமையான தூண்கள் உள்ளன என நான் டெல்லி செங்கோட்டையில் கூறினேன்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரே அந்த தூண்கள் ஆவர். விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை என்று பேசியுள்ளார்.
- 24 Feb 2025 5:18 PM IST
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபட கூடாது என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளது.
- 24 Feb 2025 4:47 PM IST
டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இரு கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.
- 24 Feb 2025 4:20 PM IST
கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களில் சிலர், புனரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என கூறி தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
- 24 Feb 2025 3:23 PM IST
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு குடோன் வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







