இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025

Update:2025-06-24 09:18 IST
Live Updates - Page 4
2025-06-24 03:49 GMT

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றம் தணிந்து, பகைமைகள் மறைவதற்கான முக்கிய விசயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

டிரம்பின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும். 12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்