இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Jun 2025 7:07 PM IST
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். போர்சூழலால் சீரானில் சிக்கி தவிக்கும் 651 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- 24 Jun 2025 6:04 PM IST
கேரளாவின் தாலிபரம்பா பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை மிரட்டிய குற்றச்சாட்டில் குற்றவாளியின் தாயாருக்கும் ஓராண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஜிபினுக்குக் ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 24 Jun 2025 5:17 PM IST
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இஸ்ரேலின் செயல்பாடு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறிய நிலையில், டிரம்ப், நெதன்யாகுவுடன் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- 24 Jun 2025 4:25 PM IST
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரானும் அதன் அணு ஆயுத அமைப்பை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
- 24 Jun 2025 4:02 PM IST
புறநகர் ரெயில்கள் அனைத்தும் 12 பெட்களாக மாற்றம்
சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரெயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் நாள்தோறும் புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும் என சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 24 Jun 2025 3:57 PM IST
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
ஜூன் 27, 28ம் தேதி கோவை மலைப்பகுதிகள், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 24, 25, 26ம் தேதி பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெர்வித்துள்ளது.
- 24 Jun 2025 3:55 PM IST
ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேல் குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கவில்லை, ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
- 24 Jun 2025 3:53 PM IST
ஏர் இந்தியா விபத்து - கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு
விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.