இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

Update:2025-12-24 09:02 IST
Live Updates - Page 3
2025-12-24 03:49 GMT

கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி

வறியவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு அன்பை, அருளை அரசியலாக்கிய மக்கள் திலகம்; ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் திரைமுகமாய் எளிய மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்த்தப் பேராளுமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-12-24 03:46 GMT

விஜய் ஹசாரேவில் ரோகித், கோலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஹசாரே தொடரில் ரோகித், கோலி விளையாடவுள்ளனர். மும்பை அணியில் ரோகித் சர்மாவும், டெல்லி அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளனர்.

2025-12-24 03:43 GMT

நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை

உதகையில் தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை உள்ள வனப்பகுதிகளில் அத்துமீறி யாரும் நுழையக் கூடாது. வனத்தில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் பயன்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்க முடியாது என வனத் துறை தெரிவித்துள்ளது.

2025-12-24 03:36 GMT

விண்ணில் செலுத்தப்பட்டது ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள்

இந்தியாவின் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும் எல்.வி.எம் 3 மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிக்கரமான விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவின் எல்.வி.எம்.3 என்ற ராக்கெட் மூலம் அமெரிக்காவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. 

2025-12-24 03:34 GMT

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பைபர் படகு

பழவேற்காடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது பைபர் படகு. படகில் இருந்த மீனவர்கள் மற்றொரு படகில் ஏறி கரை திரும்பினர். தீயை அணைக்க முயன்ற ஜெகன் என்ற மீனவருக்கு மட்டும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்