இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025

Update:2025-01-27 09:44 IST
Live Updates - Page 2
2025-01-27 10:35 GMT

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 824.29 புள்ளிகள் சரிந்து 75,366.17 புள்ளிகளிலும், நிப்டி 263.05 புள்ளிகள் சரிந்து 22,829.15 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

2025-01-27 08:50 GMT

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற குழு

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று இறுதி செய்துள்ளது. 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூட்டுக்குழு தலைவர் தெரிவித்தார். ஆலோசனையின்போது தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. 

2025-01-27 05:40 GMT

கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் - கோர்ட்டு அதிரடி

தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்