இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-01-27 09:44 IST

 

Live Updates
2025-01-27 15:35 GMT

டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் குறித்த விவாதம் இந்தியாவின் ஜனநாயக செயல்முறைக்கு மிகவும் முக்கியமானது என்றார். இளைஞர்கள் இந்த விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டு ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

2025-01-27 14:46 GMT

கார்கேவின் கருத்து சனாதனத்திற்கு எதிரானது

புனித நீராடுதல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்து சனாதனத்திற்கு எதிரானது என்று பாஜக கூறி உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறுகையில், கங்கா தேவி குறித்து கார்கே கூறிய கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களை புண்படுத்தி உள்ளது என்றும், அத்தகைய கருத்துகளுக்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2025-01-27 14:38 GMT

சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், அந்த பதவிக்கான நாற்காலியில் அமர முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

2025-01-27 13:27 GMT

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்

சென்னை மாவட்டம் ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 22,931-வது திறன்மிகு வகுப்பறையினை (Smart Classroom) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று நிறுவினார்.

இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2025-01-27 11:12 GMT

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லிக்கு வரும் யமுனை நதி நீரை அரியானா பா.ஜ.க. அரசு விஷமாக்கியிருப்பதாகவும், இதன்மூலம் டெல்லி மக்களை கொன்று பழியை ஆம் ஆத்மி அரசு மீது போட நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

2025-01-27 10:57 GMT

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று புனித நீராடினார். அவருடன் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் துறவிகள் புனித நீராடினர்.

2025-01-27 10:38 GMT

அமெரிக்க டாலரின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மந்தமான போக்கு ஆகியவை முதலீட்டாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் குறைந்து 86.33 ஆக நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்