இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

Update:2025-08-29 09:14 IST
Live Updates - Page 6
2025-08-29 03:56 GMT

திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட கொடூரம்.. உடன் பழகிய வாலிபர் தலைமறைவு


பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வனிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம். வாலிபர் நவீனை வலைவீசி தேடி வருகிறோம். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.


2025-08-29 03:52 GMT

நிகிதா அளித்த நகை திருட்டு புகார்: கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு... காரணம் என்ன?


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.


2025-08-29 03:50 GMT

தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்


தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபியாக தற்போது யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


2025-08-29 03:47 GMT

2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு


2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.


2025-08-29 03:46 GMT

இன்றைய ராசிபலன் - 29.08.2025

மிதுனம்

அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். பிரிந்தவர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்