இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-11-29 09:02 IST


Live Updates
2025-11-29 13:08 GMT

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, தி.மலை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்

2025-11-29 13:02 GMT

  • சென்னையில் இன்று முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • தமிழகம் புதுவையில் அதிகபட்சமாக 80 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்
  • தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி

2025-11-29 12:15 GMT

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை எண் - 1077

கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் - 044-2766 4177, 044-2766 6746, 044-2766 0035, 044-2766 0036

வாட்ஸ் ஆப் உதவி எண்கள் -

94443 17862, 94989 01077

2025-11-29 11:56 GMT

விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் அதிகளவு வாகனப் போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியை கடக்க சுமார் 1 மணி நேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

2025-11-29 10:27 GMT

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது. பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

2025-11-29 09:43 GMT

கூட இருந்தவர்களை விலைக்கு வாங்கியதாக தேர்தல் ஆணையத்தையே இப்போது அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். தேர்தல் ஆணையத்திடம் உண்மையை சொன்னாலும் ஏற்க மறுக்கிறது. ஏனென்றால் பணம் தேர்தல் ஆணையம் வரை போய்விட்டதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

2025-11-29 08:20 GMT

குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை 


சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.

2025-11-29 08:19 GMT

எதிர்காலம் குறித்து முடிவு: பிசிசிஐ ஆலோசனை 


விராட், ரோகித் உடல் தகுதியை தக்கவைத்து சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்