இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025

Update:2025-11-29 09:02 IST
Live Updates - Page 2
2025-11-29 08:18 GMT

இலங்கையில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த மு.க. ஸ்டாலின் 


இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

2025-11-29 07:53 GMT

சென்னைக்கு தெற்கே 380 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” 


சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-29 07:46 GMT

டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம் 


இலங்கை அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர்.


2025-11-29 07:43 GMT

முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில் ருதுராஜ் கெயிக்வாட் ? 


முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ராஞ்சி வந்துள்ளதால், அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தோனி விருந்து வைத்துள்ளார்.விருந்து முடிந்த பின் தோனி மற்றும் விராட் கோலி ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

2025-11-29 07:41 GMT

’அம்மாவை அவமானப்படுத்தினர்...காரில் கூட ஏற விடவில்லை...- மிருணாள் தாகூர் 


பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மிருணாள் தாகூர், எமோஷனலான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

2025-11-29 07:38 GMT

டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள் இலங்கையில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு 


இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2025-11-29 07:37 GMT

தந்தைக்கு டாக்டர் பட்டம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி 


தனது தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். 

2025-11-29 06:39 GMT

சென்னையை ‘டிட்வா’ புயல் தாக்குமா..? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் 


டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

2025-11-29 06:38 GMT

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது: நயினார் நாகேந்திரன் கண்டனம் 


இந்து சமய அறநிலையத்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2025-11-29 06:37 GMT

’திடீர் பிரபலத்தால் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?’ - கிரிஜா ஓக் பதில் 


நடிகை கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார்.

Tags:    

மேலும் செய்திகள்