இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

Update:2025-09-30 09:41 IST
Live Updates - Page 4
2025-09-30 05:56 GMT

தி.நகர் மேம்பாலம் திறப்பு

சென்னை தியாகராயர் நகரில் (தி.நகர்) கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2025-09-30 05:49 GMT

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழகம் வருகை

2025-09-30 05:43 GMT

முன்ஜாமீன் கோரும் N.ஆனந்த்

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் முன் ஜாமீன் கோருகின்றனர்.

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.

2025-09-30 05:42 GMT

தீபிகா படுகோனை அன்பாலோ செய்தேனா? - சர்ச்சைக்கு இயக்குனர் பரா கான் பதில்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்து வருவது தெரிந்ததே. தற்போது அவரது பெயர் மீண்டும் சமூக ஊடகங்களில் கேட்கத் தொடங்கியுள்ளது. 

2025-09-30 05:41 GMT

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவித்து ஈபிஎஸ் உத்தரவு

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகள் விடுவிப்பு

2025-09-30 05:40 GMT

சிறையிலடைப்பு

தவெக பிரசாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜ பிரமுகர் சகாயம், தவெக உறுப்பினர்கள் சிவனேசன் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் விதிப்பு.

2025-09-30 05:40 GMT

கோவை, நீலகிரியில் அதிக மழை: 21 மாவட்டங்களில் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் இயல்பை விட அதிக மழை பெற்றுள்ளன.

புதுக்கோட்டை, திருச்சி,சேலம், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய 21 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.

2025-09-30 05:39 GMT

இந்தியா கண்டனம்

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம்

உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது

2025-09-30 05:39 GMT

மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

கடந்த 9ஆம் தேதி தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விவகாரம்.

கத்தார் பிரதமர் அல்-தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார் பெஞ்சமின் நெதன்யாகு.

2025-09-30 05:38 GMT

ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இது தமிழக மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்கு ஆகும். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான். வேலைக்காகவே இங்குவந்து தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நாளை (புதன்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் தொடர்ந்து 2 நாள் விடுமுறை வருகிறது. மேலும், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வேறு விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கு வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்களும், சென்டிரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்களும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இன்று வரை சிறப்பு பஸ்கள் மூலம் 1 லட்சம் பேர், சிறப்பு ரெயில்கள் மூலம் 3 லட்சம் பேர் என மொத்தம் 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஆயுதபூஜையை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காகவும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்