தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் மைக்ரான் அளவு குறைந்த பாலித்தீன் பைகள் வைத்திருந்ததாக, கடையில் இருந்து பறிமுதல் செய்தனர்.;
தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூ மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை வியாபாரம் களைகட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மைக்ரான் அளவு குறைந்த பாலித்தீன் பைகள் வைத்திருந்ததாக, கடையில் இருந்து பறிமுதல் செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பூ வாங்க வந்த பொதுமக்களும் வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். தூத்துக்குடியில் நவராத்திரி நிறைவு நாளான இன்று சரஸ்வதி பூஜை நடைபெற உள்ள நிலையில் அதிகாரிகள் இதுபோன்று தொல்லை கொடுப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.