சென்னையில் குக்கர் வெடித்து பெண் பலியான பரிதாபம்

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-12 21:58 IST

சென்னை,

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி(55). இவர் இன்று மதியம் தனது வீட்டில் குக்கரில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்தது. வெடித்த வேகத்தில் குக்கரின் மேல் மூடி ராஜலெட்சுமியின் தலையை தாக்கியது.

இதில் படுகாயமடைந்த ராஜலெட்சுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ராஜலெட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்