திருச்சி: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-07-09 21:41 IST

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. டீக்கடை உரிமையாளர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் தர்ஷனா (16 வயது) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், அவர் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட 'நீட்' முதல் பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதில், மனவேதனை அடைந்த தர்ஷனா பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார்.

நேற்று வீட்டின் மாடிக்கு சென்று படிக்க சென்ற தர்ஷனா அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்