திருச்சி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி மாவட்டம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 11 வயது சிறுமி கார்த்திகா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், சிறுமி கார்த்திகா இன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுமி கார்த்திகா உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கப்பட்ட சிறுமியின் உறவினர் கொளஞ்சியம்மாள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.