10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது;

Update:2025-05-16 15:00 IST

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள் நடைபெற்று முடிந்த தேர்வு முடிவையே இறுதியாக கருதாமல் அடுத்தடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தங்களின் எதிர்கால இலக்குகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன். என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்