டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: அரிட்டாப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.;

Update:2025-01-23 17:56 IST

மதுரை,

மதுரை மேலூர் அருகே அரிட்டாப்பட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திட்டம் ரத்துசெய்யப்பட்டது குறித்து அரிட்டாப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது;

எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளோம். அரிட்டாப்பட்டி மக்களுக்கு இது ஒரு மறக்க முடியாத வெற்றி. நாங்கள் எங்களது வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்துள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி. அரிட்டாப்பட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்