த.வெ.க. கொடி விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி

இடைக்கால மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.;

Update:2025-07-03 06:24 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். த.வெ.க. கொடியில் வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம் பெற்று இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் த.வெ.க. கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த த.வெ.க. கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக்கோரியும், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரியும் அதே கோர்ட்டில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் மேற்கொண்டு வாதங்களை முன்வைப்பது தொடர்பாக பதில் அளிக்க த.வெ.க. தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்